ADDED : மே 17, 2026 09:05 PM

டாஷ்கென்ட்: 'காசா' ரக்பி செவன்ஸ் தொடரில் இந்திய ஆண்கள் அணி வெள்ளி வென்றது.
உஸ்பெகிஸ்தானில், மத்திய, தெற்காசிய அணிகளுக்கு இடையிலான 'காசா' ரக்பி செவன்ஸ் முதல் சீசன் நடந்தது. ஆண்கள், பெண்கள் பிரிவில் தலா 6 அணிகள் பங்கேற்றன. ஆண்கள் பிரிவு லீக் சுற்றில் உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான், மங்கோலியா, பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி, இலங்கையிடம் தோல்வியடைந்தது. புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடம் பிடித்த இலங்கை, இந்தியா அணிகள் பைனலுக்கு முன்னேறின.
பைனலில் ஏமாற்றிய இந்திய அணி 10-31 என்ற கணக்கில் இலங்கையிடம் தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கத்தை தட்டிச் சென்றது.
பெண்கள் பிரிவு லீக் சுற்றில் உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தானிடம் தோல்வியடைந்த இந்தியா, கிர்கிஸ்தான், மங்கோலியா, இலங்கை அணிகளை வீழ்த்தி 4வது இடம் பிடித்தது. வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியா, உஸ்பெகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 14-20 என்ற கணக்கில் தோல்வியடைந்து 4வது இடம் பிடித்தது.
