தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/நான்காவது சுற்றில் சபலென்கா

நான்காவது சுற்றில் சபலென்கா

நான்காவது சுற்றில் சபலென்கா


ADDED : ஆக 19, 2026 10:54 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 19, 2026 10:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சின்சினாட்டி: அமெரிக்காவில், சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் 3வது சுற்றில், பெலாரசின் அரினா சபலென்கா, சீனாவின் ஜின்யு வாங் மோதினர். இதில் சபலென்கா 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப் 6-1, 7-6 என, சகவீராங்கனை ஆன் லீயை வென்றார். அமெரிக்காவின் மடிசன் கீஸ் 6-1, 6-3 என, செக்குடியரசின் கேத்ரினா சினியாகோவாவை தோற்கடித்தார்.

ஆஸ்திரேலிய வீரருக்கு தடை

லண்டன்: ஆஸ்திரேலிய டென்னிஸ் வீரர் நிக் கிரியாஸ் 31. விம்பிள்டனில் (2022) பைனல் வரை சென்றிருந்தார். காயத்தால் ஓய்வில் உள்ள இவருக்கு, சமீபத்தில் ஊக்கமருந்து பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் தடை செய்யப்பட்ட 'கொகைன்' ஊக்க மருந்து பயன்படுத்தியது உறுதியானது. இதனால் டென்னிஸ் போட்டியில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

எக்ஸ்டிராஸ்

* மும்பையில், ஆசிய ஜூனியர் 'ரேபிட்' செஸ் சாம்பியன்ஷிப் நடந்தது. இதன் 'ஓபன்' பிரிவில் இந்தியாவின் விவான் விஷால் சாம்பியன் பட்டம் வென்றார். பெண்கள் பிரிவில் துர்க்மெனிஸ்தானின் ஷோஹ்ரடோவா லாலா சாம்பியன் ஆனார்.

* அமெரிக்காவின் செயின்ட் லுாயிஸ் நகரில் பெண்களுக்கான கெய்ர்ன்ஸ் கோப்பை செஸ் தொடர் நடக்கிறது. இந்தியாவின் கோனேரு ஹம்பி (வெள்ளை), திவ்யா தேஷ்முக் (கறுப்பு) மோதிய 8வது சுற்று 'டிரா' ஆனது. இந்தியாவின் வைஷாலி (வெள்ளை), அமெரிக்காவின் ஆலிஸ் லீயிடம் (கறுப்பு) தோல்வியடைந்தார்.

* கான்பூரில், தேசிய ரேங்கிங் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் நடந்தது. பெண்கள் ஒற்றையர் (11 வயது) பைனலில், மேற்கு வங்கத்தின் கிருத்திகா சைபோ 3-2 என, ஹரியானாவின் பால்கன் குப்தாவை வீழ்த்தினார். ஆண்கள் ஒற்றையர் (11 வயது) பைனலில், மேற்கு வங்கத்தின் தேபான்ஷு சக்ரவர்த்தி 3-1 என, மஹாராஷ்டிராவின் ராஜ்வர்தன் திவாரியை வென்றார்.

* மேகாலயாவின் ஷில்லாங் நகரில் இன்று நடக்கவுள்ள துாரந்த் கோப்பை கால்பந்து தொடருக்கான அரையிறுதியில் வடகிழக்கு யுனைடெட், மோகன் பகான் அணிகள் மோதுகின்றன.

* துலீப் டிராபி கிரிக்கெட் தொடருக்கான பைனல் (செப். 6-10) பெங்களூருவில் இருந்து சென்னை, சேப்பாக்கம் மைதானத்திற்கு மாற்றப்பட்டது. இப்போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us