
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சார்ஜா: சார்ஜாவில், 7வது மாஸ்டர்ஸ் செஸ் தொடர் நடக்கிறது. ஒன்பது சுற்று கொண்ட இத்தொடரில் 19 இந்தியர் உட்பட மொத்தம் 88 பேர் பங்கேற்கின்றனர்.
ஆறாவது சுற்றில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, ஸ்பெயினின் டேனில் யுபாவை சந்தித்தார். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய அர்ஜுன், போட்டியின் 42 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
இந்தியாவின் அரவிந்த் சிதம்பரம், அமெரிக்காவின் சாமுவேல் மோதிய ஆறாவது சுற்று போட்டி 'டிரா' ஆனது. இந்தியாவின் பிரனவ், அமெரிக்காவின் சாம் சேவியனை வீழ்த்தினார்.
ஆறு சுற்று முடிவில் முதல் இரு இடத்தில் சாமுவேல் (5.5), ஈரானின் தானேஷ்வர் (5.5) உள்ளனர். அரவிந்த் சிதம்பரம் (5.0) 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார். அர்ஜுன் (5.0), 6வது இடத்தில் உள்ளார்.

