/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
துப்பாக்கி சுடுதல்: அபினவ் 'தங்கம்'
/
துப்பாக்கி சுடுதல்: அபினவ் 'தங்கம்'
ADDED : ஏப் 27, 2025 07:58 PM

புதுடில்லி: துப்பாக்கி சுடுதல் 10 மீ., 'ஏர் ரைபிள்' பிரிவில் மேற்கு வங்கத்தின் அபினவ் ஷா 'ஹாட்ரிக்' தங்கம் வென்றார்.
டில்லியில், குமார் சுரேந்திர சிங் நினைவு துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் நடக்கிறது. சீனியர் கலப்பு அணிகளுக்கான 10 மீ., 'ஏர் ரைபிள்' பிரிவு பைனலில் மேற்கு வங்கத்தின் அபினவ் ஷா, மெஹுலி கோஷ் ஜோடி 16-4 என, ரயில்வே அணியின் மேகனா சஜ்ஜனார், ஷாஹு துஷார் மானே ஜோடியை வீழ்த்தி தங்கம் வென்றது. குஜராத்தின் இளவேனில் வளரிவன், ஸ்மித் ரமேஷ்பாய் மொரடியா ஜோடி வெண்கலம் கைப்பற்றியது.
ஜூனியர் கலப்பு அணிகளுக்கான 10 மீ., 'ஏர் ரைபிள்' பிரிவு பைனலில் மேற்கு வங்கத்தின் அபினவ் ஷா, ஸ்வாதி சவுத்ரி ஜோடி 16-12 என, மஹாராஷ்டிராவின் ஷாம்பவி, பார்த் ராகேஷ் மானே ஜோடியை வீழ்த்தி தங்கத்தை தட்டிச் சென்றது. மத்திய பிரதேசத்தின் அபினவ் அகர்வால், கவுதமி ஜோடி வெண்கலம் வென்றது.
'யூத்' கலப்பு அணிகளுக்கான 10 மீ., 'ஏர் ரைபிள்' பிரிவு பைனலில் மேற்கு வங்கத்தின் அபினவ் ஷா, சான்ட்ரடா ராய் ஜோடி 17-5 என மத்திய பிரதேசத்தின் நிகில், கவுதமி ஜோடியை வீழ்த்தி தங்கம் கைப்பற்றியது.