/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
துப்பாக்கி சுடுதல்: அபினவ் 'தங்கம்'
/
துப்பாக்கி சுடுதல்: அபினவ் 'தங்கம்'
ADDED : ஆக 21, 2025 10:29 PM

ஷிம்கென்ட்: ஆசிய துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் அபினவ் ஷா (10 மீ., 'ஏர் ரைபிள்'), மான்சி ('ஸ்கீட்') தங்கம் வென்றனர்.
கஜகஸ்தானில், ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் 16வது சீசன் நடக்கிறது. ஜூனியர் ஆண்களுக்கான 10 மீ., 'ஏர் ரைபிள்' பைனலில் இந்தியாவின் அபினவ் ஷா, 250.4 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். இதன் அணிகள் பிரிவில் அபினவ் ஷா (628.1), ஹிமான்ஷு (630.9), நரேன் பிரனவ் (631.1) அடங்கிய இந்திய அணி 1890.1 புள்ளிகளுடன் உலக சாதனையுடன் தங்கம் வென்றது.
மான்சி 'தங்கம்': ஜூனியர் பெண்களுக்கான 'ஸ்கீட்' பிரிவு பைனலில் அசத்திய மான்சி ரகுவன்ஷி, 53 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். மற்றொரு இந்திய வீராங்கனை யாஷஸ்வி ரத்தோர் (52) வெள்ளி வென்றார். அக்ரிமா கன்வர் (15 புள்ளி) 6வது இடம் பிடித்தார்.
ஹர்மெஹர் 'வெள்ளி': ஜூனியர் ஆண்களுக்கான 'ஸ்கீட்' பிரிவு பைனலில் அசத்திய இந்தியாவின் ஹர்மெஹர் சிங் லல்லி, 52 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றார். ஜோதிராதித்ய சிங் சிசோடியா (43) வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார். இஷான் சிங் லிப்ரா (14) 6வது இடம் பிடித்தார்.
இந்தியா 'தங்கம்': ஆண்கள் அணிகளுக்கான 10 மீ., 'ஏர் ரைபிள்' பிரிவில் ருத்ராங்க் ஷ் பாலாசாகேப் பாட்டீல் (632.3 புள்ளி), அர்ஜுன் பாபுதா (631.6), கிரண் அங்குஷ் ஜாதவ் (628.6) அடங்கிய இந்திய அணி, 1892.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது.
இதுவரை 14 தங்கம், 6 வெள்ளி, 6 வெண்கலம் என, 26 பதக்கம் வென்ற இந்தியா, பதக்கப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.