/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
துப்பாக்கி சுடுதல்: கிரண் ஜாதவ் 'தங்கம்'
/
துப்பாக்கி சுடுதல்: கிரண் ஜாதவ் 'தங்கம்'
ADDED : ஜன 06, 2025 11:05 PM

மும்பை: லக்சயா கோப்பை துப்பாக்கி சுடுதலில் கிரண் ஜாதவ் (10 மீ., 'ஏர் ரைபிள்') தங்கம் வென்றார்.
மும்பையில், லக்சயா கோப்பை துப்பாக்கி சுடுதல் 15வது சீசன் நடந்தது. இதன் 10 மீ., 'ஏர் ரைபிள்' பைனலில் 251.7 புள்ளிகளுடன் இந்திய கடற்படை அணி வீரர் கிரண் ஜாதவ் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். கடந்த 2018 முதல் இத்தொடரின் பைனலுக்கு தகுதி பெற்று வந்த இவர், முதன்முறையாக தங்கம் வென்றார். அடுத்த இரு இடங்களை மகாராஷ்டிராவின் கஜானன் (250.9 புள்ளி), மோகித் கவுடா (229.3) கைப்பற்றினர்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் பைனல் வரை சென்ற ரயில்வேஸ் அணியின் அர்ஜுன் பாபுதா 208.2 புள்ளிகளுடன் 4வது இடம் பிடித்தார். மற்ற வீரர்களான ராஜஸ்தானின் திவ்யான்ஷ் சிங் பன்வார் (629.0), இராணுவ அணி வீரர் சந்தீப் சிங் (623.3) பைனலுக்கு தகுதி பெறவில்லை.

