/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
துப்பாக்கி சுடுதல்: சங்வான் முதலிடம்
/
துப்பாக்கி சுடுதல்: சங்வான் முதலிடம்
ADDED : ஏப் 25, 2024 11:14 PM

புதுடில்லி: ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் தகுதி போட்டியில் ரிதம் சங்வான் முதலிடம் பிடித்தார்.
டில்லியில், பாரிஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் பங்கேற்கும், இந்திய நட்சத்திரங்களுக்கான தகுதி போட்டி நடக்கிறது. பெண்களுக்கான 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவு பைனலில் 243.5 புள்ளிகளுடன் ரிதம் சங்வான் முதலிடத்தை கைப்பற்றினார். அடுத்த இரு இடங்களை மனு பாகர் (237.8 புள்ளி), பாலக் (217.5) பிடித்தனர்.
ஆண்களுக்கான 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவு பைனலில் வருண் தோமர் 244.1 புள்ளிகளுடன் முதலிடத்தை தட்டிச் சென்றார். அடுத்த இரு இடங்களை ரவிந்தர் சிங் (240.0), சரப்ஜோத் சிங் (217.4) கைப்பற்றினர்.
பெண்களுக்கான 10 மீ., 'ஏர் ரைபிள்' பிரிவு பைனலில் நான்சி 253.4 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். அடுத்த இரு இடங்களை மெஹுலி கோஷ் (252.7), இளவேனில் (230.5) தட்டிச் சென்றனர்.
ஆண்களுக்கான 10 மீ., 'ஏர் ரைபிள்' பிரிவு பைனலில் அர்ஜுன் பாபுதா 254.0 புள்ளிகளுடன் முதலிடத்தை கைப்பற்றினார். இது, உலக சாதனை இலக்கை விட 0.3 புள்ளி அதிகம். சமீபத்தில் எகிப்தில் நடந்த கெய்ரோ உலக கோப்பையில் இந்தியாவின் திவ்யான்ஷ் பன்வார் 253.7 புள்ளிகளுடன் உலக சாதனை படைத்திருந்தார். அடுத்த இரு இடங்களை ருத்ராங்க் ஷ் பாட்டீல் (251.2), ஸ்ரீ கார்த்திக் சபரி (229.6) பிடித்தனர்.

