/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
துப்பாக்கி சுடுதல்: சிப்ட் கவுர் முதலிடம்
/
துப்பாக்கி சுடுதல்: சிப்ட் கவுர் முதலிடம்
ADDED : ஏப் 24, 2024 10:30 PM

புதுடில்லி: ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் தகுதி போட்டியில் சிப்ட் கவுர் சாம்ரா, நிரஜ் குமார் முதலிடம் பிடித்தனர்.
டில்லியில், பாரிஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் பங்கேற்கும், இந்திய நட்சத்திரங்களுக்கான தகுதி போட்டி நடக்கிறது. பெண்களுக்கான 50 மீ., 'ரைபிள்-3 பொஷிஷன்' பிரிவு பைனலில் சிப்ட் கவுர் சாம்ரா, 466.3 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். சீனாவில் 2022ல் நடந்த ஆசிய விளையாட்டில் 50 மீ., 'ரைபிள்-3 பொஷிஷன்' தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற சிப்ட் கவுர், அணிகள் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். அடுத்த இரு இடங்களை ஆஷி சோக்சி (462.6 புள்ளி), அஞ்சும் (449.2) கைப்பற்றினர்.
நான்காவது, 5வது இடத்தை நிஷ்சல் (433.6), ஷ்ரியங்கா சதாங்கி (416.7) பிடித்தனர்.
ஆண்களுக்கான 50 மீ., 'ரைபிள்-3 பொஷிஷன்' பிரிவு பைனலில் 462.2 புள்ளிகளுடன் நிரஜ் குமார் முதலிடத்தை தட்டிச் சென்றார். அடுத்த இரு இடங்களை ஸ்வப்னில் குசாலே (460.9 புள்ளி), ஐஸ்வரி தோமர் (450.5) கைப்பற்றினர். செயின் சிங் (439.8), அகில் ஷியோரன் (429.1) 4, 5வது இடத்தை பிடித்தனர்.
ஆண்கள், பெண்களுக்கான 10 மீ., 'ஏர் ரைபிள்' பிரிவு தகுதிச் சுற்றில் சந்தீப் சிங் (634.4 புள்ளி), திலோத்தமா சென் (632.4) முதலிடத்தை கைப்பற்றினர். ஆண்கள், பெண்களுக்கான 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில் வருண் தோமர் (583 புள்ளி), ரிதம் சங்வான் (578) முதலிடத்தை தட்டிச் சென்றனர்.

