/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
தங்கம் வென்றார் கானக் * உலக 'ஜூனியர்' துப்பாக்கிசுடுதலில்...
/
தங்கம் வென்றார் கானக் * உலக 'ஜூனியர்' துப்பாக்கிசுடுதலில்...
தங்கம் வென்றார் கானக் * உலக 'ஜூனியர்' துப்பாக்கிசுடுதலில்...
தங்கம் வென்றார் கானக் * உலக 'ஜூனியர்' துப்பாக்கிசுடுதலில்...
ADDED : மே 22, 2025 12:20 AM

சஹ்ல்: ஜெர்மனியில் ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கிசுடுதல் நடக்கிறது. பெண்களுக்கான 10 மீ., ஏர் பிஸ்டல் போட்டி நடந்தது. இதன் தகுதிச்சுற்றில் இந்தியாவின் கானக் (572), பிராச்சி (571) 4, 5வது இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினர். மற்ற இந்திய வீராங்கனைகள் ராஷ்மிகா (566) 14, சான்ஸ்கிருதி (565) 15வது இடம் பிடித்த, பதக்க வய்ப்பை இழந்தனர்.
அடுத்து நடந்த பைனலில் சிறப்பாக செயல்பட்ட கானக், 239 புள்ளி எடுத்து முதலிடம் பிடித்து, தங்கப்பதக்கம் கைப்பற்றினார். மால்டோவாவின் அனா டல்ஸ் (237.3), சீன தைபேவின் என்-சிங் (216.8) அடுத்த இரு இடம் பெற, வெள்ளி, வெண்கல பதக்கம் வென்றனர். இந்தியாவின் பிராச்சி (176) ஐந்தாவது இடம் மட்டும் பிடித்தார்.
இதுவரை தலா ஒரு தங்கம், வெள்ளி என 2 பதக்கம் வென்ற இந்தியா, பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. நார்வே (1 தங்கம்), சுவீடன் (1 தங்கம்) அடுத்த இரு இடத்தில் உள்ளன.