/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
துப்பாக்கிசுடுதல்: மனு பாகர் ஏமாற்றம்
/
துப்பாக்கிசுடுதல்: மனு பாகர் ஏமாற்றம்
ADDED : ஜூன் 11, 2025 10:39 PM

முனிக்: ஜெர்மனியின் முனிக் நகரில் உலக கோப்பை துப்பாக்கிசுடுதல் போட்டி நேற்று துவங்கியது. பெண்களுக்கான 25 மீ., பிஸ்டல் பிரிவு போட்டி நடந்தது. பாரிஸ் ஒலிம்பிக்கில் 2 வெண்கலம் வென்ற இந்தியாவின் மனு பாகர் பங்கேற்றார். தகுதிச்சுற்றில் 588 புள்ளி எடுத்து, 8 பேர் பங்கேற்ற பைனலுக்கு முன்னேறினார். இதில் மனு பாகர், 20 புள்ளி மட்டும் எடுத்து, ஆறாவது இடம் பிடித்து ஏமாற்றினார்.
ஆண்களுக்கான 50 மீ., ரைபிள் 3 பொசிசன்ஸ் பிரிவில், இந்தியாவின் செயின் சிங், தகுதிச்சுற்றில் 592 புள்ளி எடுத்து, பைனலுக்கு முன்னேறினார். இதில் 7வது இடம் மட்டும் பிடித்து, பதக்க வாய்ப்பை இழந்தார்.
பிரிசிசன், ரேபிட் பயர் பிரிவில் இந்தியாவின் ஈஷா சிங், 585 புள்ளி எடுத்து, 11 வது இடம் பெற, பைனல் வாய்ப்பு பறிபோனது. மற்றொரு வீராங்கனை சிம்ரன்பிரீத் கவுர் (577), 32வது இடம் பெற்றார்.