/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஸ்னுாக்கர்: பங்கஜ் அத்வானி வெற்றி
/
ஸ்னுாக்கர்: பங்கஜ் அத்வானி வெற்றி
ADDED : மார் 05, 2025 10:11 PM

மும்பை: ஸ்னுாக்கர் கிளாசிக் முதல் சுற்றில் பங்கஜ் அத்வானி வெற்றி பெற்றார்.
மும்பையில், சி.சி.ஐ., ஸ்னுாக்கர் கிளாசிக் தொடர் நடக்கிறது. இதன் முதல் சுற்றில் ('ரவுண்ட்-32') பெட்ரோலிய விளையாட்டு மேம்பாட்டு வாரியம் (பி.எஸ்.பி.பி.,) அணியின் பங்கஜ் அத்வானி, தெலுங்கானாவின் ஹிமான்ஷு ஜெயின் மோதினர். அபாரமாக ஆடிய 'நடப்பு சாம்பியன்' பங்கஜ் அத்வானி 4-1 (43-77, 72-56, 80-33, 80-6) என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
மற்றொரு போட்டியில் பி.எஸ்.பி.பி., அணியின் ஆதித்யா மேத்தா, கர்நாடகாவின் யோகேஷ் குமார் மோதினர். இதில் ஆதித்யா 4-3 (42-77, 53-86, 57-41, 60-49, 87-10, 24-68, 115-8) என்ற கணக்கில் 'திரில்' வெற்றி பெற்றார். மற்றொரு முதல் சுற்றில் மகாராஷ்டிராவின் இஷ்பிரீத் சிங் சதா, ரயில்வேஸ் அணியின் பாண்டுரங்காய் மோதினர். இதில் அசத்திய இஷ்பிரீத் சிங் 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.