/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஸ்குவாஷ்: காலிறுதியில் அனாஹத்
/
ஸ்குவாஷ்: காலிறுதியில் அனாஹத்
ADDED : அக் 17, 2025 10:08 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாஸ்டன்: பாஸ்டன் ஓபன் ஸ்குவாஷ் காலிறுதிக்கு இந்தியாவின் அனாஹத் முன்னேறினார்.
அமெரிக்காவில், பெண்களுக்கான பாஸ்டன் ஓபன் சேலஞ்சர் ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. இதன் 2வது சுற்றில் இந்தியாவின் அனாஹத் சிங், அமெரிக்காவின் சார்லோட்டி ஸ்ஸே மோதினர். இதில் அனாஹத் 3-1 (11-4, 11-6, 9-11, 11-8) என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
காலிறுதியில் அனாஹத், எகிப்தின் ஜனா ஸ்வைபை மோதுகின்றனர்.