/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஸ்குவாஷ்: ஜோஷ்னா 'சாம்பியன்'
/
ஸ்குவாஷ்: ஜோஷ்னா 'சாம்பியன்'
ADDED : டிச 21, 2025 10:36 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மும்பை: 'வெஸ்டர்ன் இந்தியா' ஸ்குவாஷ் தொடரில் ஜோஷ்னா, வீர் சோட்ரானி சாம்பியன் பட்டம் வென்றனர்.
மும்பையில், 'வெஸ்டர்ன் இந்தியா' ஸ்குவாஷ் 80வது சீசன் நடந்தது. பெண்களுக்கான பைனலில் ஜோஷ்னா சின்னப்பா, சானியா வாட்ஸ் மோதினர். அபாரமாக ஆடிய ஜோஷ்னா 3-1 (7-11, 11-8, 11-8, 11-5) என்ற கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். கடைசியாக 2007-08 சீசனில் கோப்பை வென்றிருந்தார்.
ஆண்களுக்கான பைனலில் வீர் சோட்ரானி, சூரஜ் சந்த் மோதினர். இதில் சோட்ரானி 3-0 (11-9, 11-9, 11-2) என்ற கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் 2வது முறையாக சாம்பியன் ஆனார். இதற்கு முன், 2022-23 சீசனில் கோப்பை கைப்பற்றினார்.

