UPDATED : நவ 13, 2026 12:00 AM
ADDED : நவ 12, 2026 09:45 PM

சிங்கப்பூர்: சிங்கப்பூர் கிளாசிக் ஸ்குவாஷ் முதல் சுற்றில் இந்தியாவின் ராதிகா, சான்யா வாட்ஸ், ஓம் செம்வால் வெற்றி பெற்றனர்.
சிங்கப்பூரில், கிளாசிக் ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. பெண்களுக்கான முதல் சுற்றில், இந்தியாவின் ராதிகா, சிங்கப்பூரின் ஜெய்னா லிம் மோதினர். அபாரமாக ஆடிய ராதிகா 3–0 (11–7, 12–10, 11–9) என்ற கணக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் இந்திய வீராங்கனை சான்யா வாட்ஸ் 3–1 (10–12, 11–6, 11–8, 11–5) என, எகிப்தின் கிளாரா டிவெரியை வென்றார்.
ஆண்களுக்கான முதல் சுற்றில் இந்தியாவின் ஓம் செம்வால், சிங்கப்பூரின் ஆரோன் லியாங் மோதினர். ஒரு கட்டத்தில் 1–2 என பின்தங்கி இருந்த செம்வால், பின் எழுச்சி கண்டு 3–2 (15–13, 6–11, 13–15, 11–9, 11–8) என்ற கணக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் சந்தேஷ் 0–3 (1–11, 3–11, 6–11) என, ஆஸ்திரேலியாவின் பெஞ்சமின் ராட்கிளிப்பிடம் தோல்வியடைந்தார்.
முதல் சுற்றில் ‘பை’ வழங்கப்பட்ட இந்தியாவின் சூரஜ் குமார் சந்த், தான்வி, நேரடியாக 2வது சுற்றில் விளையாடுவர்.
