UPDATED : நவ 13, 2026 12:00 AM
ADDED : நவ 12, 2026 09:46 PM

அரையிறுதியில் ஆன்ட்ரீவா
இந்தியன் வெல்ஸ்: அமெரிக்காவின் இந்தியன் வெல்ஸ் நகரில், பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., பைனல்ஸ் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ‘குரூப்–2’ லீக் போட்டியில், ரஷ்யாவின் மிர்ரா ஆன்ட்ரீவா, பெலாரசின் அரினா சலபென்கா மோதினர். இதில் ஆன்ட்ரீவா 6–4, 6–0 என வெற்றி பெற்றார். ஏற்கனவே உக்ரைனின் எலினா ஸ்விடோலினாவை வீழ்த்திய ஆன்ட்ரீவா, தொடர்ச்சியாக 2வது வெற்றியை பதிவு செய்து அரையிறுதிக்கு முன்னேறினார்.
லியோன்ஸ் அணி அபாரம்
பியெல்லா: பெண்களுக்கான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கிளப் கால்பந்து 26வது சீசன் நடக்கிறது. இத்தாலியில் நடந்த லீக் போட்டியில், இத்தாலியின் யுவன்டஸ் அணி, பிரான்சின் லியோன்ஸ் அணியை சந்தித்தது. இதில் கோல் மழை பொழிந்த லியோன்ஸ் அணி 6–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதுவரை விளையாடிய 4 போட்டியில், 3 வெற்றி, ஒரு ‘டிரா’ என, 10 புள்ளிகளுடன் லியோன்ஸ் அணி முதலிடத்துக்கு முன்னேறியது. அடுத்த இடத்தில் ஸ்பெயினின் பார்சிலோனா அணி (9 புள்ளி) உள்ளது.
சர்ரே அணியில் ஆண்டர்சன்
லண்டன்: இங்கிலாந்தில் நடக்கும் ‘கவுன்டி’ சாம்பியன்ஷிப் போட்டியில், இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 44, லங்காஷயர் அணியில் (2001–2026) இருந்து சமீபத்தில் விலகினார். தற்போது இவர், சர்ரே அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 2024ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஆண்டர்சன், 188 டெஸ்டில், 704 விக்கெட் சாய்த்துள்ளார்.
