ADDED : ஜன 14, 2026 09:29 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டெட்ராய்ட்: மோட்டார் சிட்டி ஓபன் ஸ்குவாஷ் முதல் சுற்றில் இந்தியாவின் வேலவன், ரமித் டான்டன் வெற்றி பெற்றனர்.
அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரில், 'டி.ஆர்.21' மோட்டார் சிட்டி ஓபன் ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. இதன் முதல் சுற்றில் இந்தியாவின் வேலவன் செந்தில்குமார், இங்கிலாந்தின் சாமுவேல் ஆஸ்போர்ன்-வைல்ட் மோதினர். இதில் வேலவன் 3-0 (11-9, 11-5, 11-6) என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் ரமித் டான்டன், இங்கிலாந்தின் டாம் வால்ஷ் மோதினர். இதில் ரமித் 3-1 (11-8, 11-4, 8-11, 11-4) என்ற கணக்கில் வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

