தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/ஒலிம்பிக் பதக்கம்: அனாஹத் இலக்கு

ஒலிம்பிக் பதக்கம்: அனாஹத் இலக்கு

ஒலிம்பிக் பதக்கம்: அனாஹத் இலக்கு


ADDED : மார் 17, 2026 10:35 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 17, 2026 10:35 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மும்பை: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வரும் 2028, ஜூலை 14-30ல் ஒலிம்பிக் போட்டி நடக்க உள்ளது. பாரிஸ் (2024) ஒலிம்பிக்கை விட 28 பதக்க போட்டிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டன. கிரிக்கெட், ஸ்குவாஷ் உட்பட 5 புதிய போட்டிகள் இடம் பெற்றுள்ளன.

இதுகுறித்து இந்தியாவின் முன்னணி ஸ்குவாஷ் வீராங்கனை அனாஹத் சிங் 18, கூறுகையில்,''ஒலிம்பிக்கில் முதன் முறையாக ஸ்குவாஷ் சேர்க்கப்பட்டுள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகின் அனைத்து ஸ்குவாஷ் நட்சத்திரங்களும் ஒலிம்பிக்கை எதிர்பார்த்துள்ளனர். இதற்கு முன், அதிகபட்சம் காமன்வெல்த் விளையாட்டில் இப்போட்டி இடம் பெற்றிருந்தது.

தற்போது ஒலிம்பிக் என்பதால், ஒவ்வொருவரும் இதில் பங்கேற்க வேண்டும், பதக்கம் வெல்ல வேண்டும் என கனவு காண்பர். அடுத்த சில ஆண்டுகள் ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வு பெறுவது லட்சியமாக இருக்கும். என் மனதிலும் ஒலிம்பிக் முக்கிய இடம் பெற்றுள்ளது. பதக்கம் வெல்ல முயற்சிப்பேன்,''என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us