ADDED : மார் 27, 2025 10:53 PM

மும்பை: இந்தியன் ஓபன் ஸ்குவாஷ் பைனலுக்கு இந்தியாவின் அனாஹத், அபே சிங் முன்னேறினர்.
இந்தியாவில் ஏழு ஆண்டுக்குப் பின், சர்வதேச 'இந்தியன் ஓபன் ஸ்குவாஷ்' மும்பையில் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் அரையிறுதியில் சுற்றில் இத்தொடரின் 'நம்பர்-1' வீராங்கனை, 'சீனியர்' ஜோஷ்னா சின்னப்பா 38, 'நம்பர்-3' ஆக உள்ள 17 வயது சக வீராங்கனை அனாஹத் சிங்கை சந்தித்தார்.
முதல் செட்டை 11-7 என கைப்பற்றிய அனாஹத், அடுத்த செட்டை 5-11 என இழந்தார். பின் அடுத்த இரு செட்டையும் 11-6, 11-6 என வசப்படுத்தினார். முடிவில் அனாஹத், 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, பைனலுக்குள் நுழைந்தார்.
அபே சிங் அபாரம்
ஆண்கள் ஒற்றையர் அரையிறுதியில் இந்தியாவின் அபே சிங், எகிப்தில் கரிம் எல் ஹம்மமியை எதிர்கொண்டார். இதில் அபே சிங், 3-1 என்ற செட் (11-4, 11-6, 6-11, 11-6) கணக்கில் வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறினார்.