/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஸ்குவாஷ்: அரையிறுதியில் வேலவன்
/
ஸ்குவாஷ்: அரையிறுதியில் வேலவன்
ADDED : ஜூன் 19, 2025 10:49 PM

குச்சிங்: மலேசியாவில் ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியா சார்பில் வேலவன் செந்தில்குமார் பங்கேற்கிறார். கடந்த முறை வெள்ளி வென்ற இவர், இம்முறை இத்தொடரின் 'நம்பர்-3' அந்தஸ்து பெற்ற வீரராக களமிறங்குகிறார்.
நேற்று நடந்த காலிறுதியில் வேலவன் செந்தில்குமார், மலேசியாவின் ஜோசிம் சுவாவை எதிர்கொண்டார்.
முதல் இரு செட்டை 11-7, 11-6 என வசப்படுத்தினார் வேலவன். தொடர்ந்து மூன்றாவது செட்டையும் 11-6 என கைப்பற்றினார். முடிவில் வேலவன் 3-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார். குறைந்த பட்சம் ஒரு பதக்கத்தை உறுதி செய்தார். அரையிறுதியில் இத்தொடரின் 'நம்பர்-2' வீரர், ஹாங்காங்கின் லாவ் க்வானை எதிர்கொள்கிறார்.