/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
உலக கோப்பை ஸ்குவாஷ்: இந்தியா முதல் வெற்றி
/
உலக கோப்பை ஸ்குவாஷ்: இந்தியா முதல் வெற்றி
ADDED : டிச 10, 2025 10:31 PM

சென்னை: உலக கோப்பை ஷ்குவாஷ் முதல் போட்டியில் இந்திய அணி, சுவிட்சர்லாந்தை வீழ்த்தியது.
உலக கோப்பை ஷ்குவாஷ் தொடரின் 5வது சீசன் சென்னையில் தொடர்ந்து மூன்றாவது முறையாக (2011, 2023, 2025) நடக்கிறது.
இந்தியா, ஹாங்காங், 2 முறை சாம்பியன் ஆன எகிப்து உட்பட 12 அணிகள், 4 பிரிவுகளாக பங்கேற்கின்றன.
கடந்த முறை மூன்றாவது இடம் பெற்ற இந்திய அணி, 'பி' பிரிவில் சுவிட்சர்லாந்து, பிரேசில் அணிகளுடன் இடம் பெற்றுள்ளன.
இந்திய அணியில் ஜோஷ்னா சின்னப்பா 39, அபே சிங் 27, வேலவன் செந்தில் குமார் 27, அனாஹத் சிங் 17, இடம் பெற்றனர். அனாஹத் சிங் (17 வயது), உலக கோப்பை ஷ்குவாஷ் தொடரில் பங்கேற்ற இளம் வீராங்கனை ஆனார். இந்திய அணி, தனது முதல் போட்டியில் சுவிட்சர்லாந்தை எதிர்கொண்டது.
இந்தியாவின் வேலவன், சுவிட்சர்லாந்தின் ராபின் கடோலாவை 3-0 (7-6, 7-6, 7-5) என்ற நேர் செட்டில் வீழ்த்தினார்.
அனாஹத் சிங் 3-0 (7-1, 7-4, 7-2) என வால்செரை வென்றார். இந்தியாவின் அபே சிங் 3-0 என (7-7, 7-5, 7-3) ஹபெசை வென்றார். இந்தியாவின் ஜோஷ்னா, 3-1 என (7-1, 5-7, 7-2, 7-0) ஸ்டெல்லாவை சாய்த்தார். முடிவில் இந்தியா 4-0 என்ற கணக்கில் முதல் வெற்றி பெற்றது.

