/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஸ்குவாஷ்: காலிறுதியில் அனாஹத்
/
ஸ்குவாஷ்: காலிறுதியில் அனாஹத்
ADDED : ஜூலை 23, 2025 09:27 PM

கெய்ரோ: உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடரின் காலிறுதிக்கு முன்னேறினார் அனாஹத் சிங்.
எகிப்தில் உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் மூன்றாவது சுற்றில், ஆசிய ஜூனியர் (19 வயது) சாம்பியன், இத்தொடரின் 'நம்பர்-2' அந்தஸ்து பெற்ற இந்தியாவின் அனாஹத் சிங், பிரேசிலின் லாரா சவுசாவை சந்தித்தார்.
முதல் செட்டை 11-5 என வென்ற அனாஹத், அடுத்த செட்டை 11-2 என எளிதாக வசப்படுத்தினார். தொடர்ந்து மூன்றாவது செட்டையும் 11-6 என கைப்பற்றினார். முடிவில் 3-0 என வெற்றி பெற்று, காலிறுதிக்குள் நுழைந்தார். இதில் அனாஹத், எகிப்தின் மலிகாவை சந்திக்க உள்ளார்.
ஆண்கள் ஒற்றையர் மூன்றாவது சுற்றில் இந்தியாவின் ஆர்யவீர், 0-3 என (2-11, 6-11, 7-11) எகிப்தின் செய்பெல்டினிடம் தோல்வியடைந்தார். மற்றொரு இந்திய வீரர் யூஷா நபீஸ், 1-3 என (11-9, 4-11, 8-11, 5-11) கொலம்பியாவின் ஜுவானிடம் வீழ்ந்தார்.