ADDED : ஆக 06, 2026 11:08 PM

மும்பை: உலக பல்கலை., ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் பட்டம் வென்று சாதனை படைத்தார் சுராஜ் குமார்.
சர்வதேச பல்கலை., விளையாட்டு கூட்டமைப்பு (எஸ்.ஐ.எஸ்.யு.,) சார்பில் உலக பல்கலை., ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப், மும்பையில் நடந்தது. 16 நாடுகளில் இருந்து இதில் பங்கேற்றனர். ஆண்கள் ஒற்றையரில் அரையிறுதியில் இந்தியாவின் சுராஜ் குமார் சந்த், பிரான்சின் ஜோஷுவாவை வீழ்த்தினார்.
நேற்று நடந்த பைனலில் சுராஜ் குமார், ஹங்கேரியின் பெனடிக் டகக்சை எதிர் கொண்டார். முதல் செட்டை 5-11 என இழந்த சுராஜ், அடுத்த இரு செட்டை 11-8, 11-5 என கைப்பற்றினார். நான்காவது செட்டை 11-6 என இழந்தார். வெற்றியாளரை முடிவு செய்ய நடந்த 5வது, கடைசி செட்டில் ஆதிக்கம் செலுத்திய சுராஜ், 11-4 என வசப்படுத்தினார்.
முடிவில் 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். உலக பல்கலை., ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் பட்டம் வென்ற முதல் இந்தியர் என புதி வரலாறு படைத்தார் சுராஜ்.
மற்ற இந்திய வீரர்கள் சேம்வல் 3, சந்தேஷ் 7 வது இடம் பெற்றனர். பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் பூஜா, அதிகபட்சம் 9வது இடம் பிடித்தார்.
