sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

'புயல்' வேக வீரர் நோவா லைல்ஸ்: 100 மீ., ஓட்டத்தில் தங்கம்

/

'புயல்' வேக வீரர் நோவா லைல்ஸ்: 100 மீ., ஓட்டத்தில் தங்கம்

'புயல்' வேக வீரர் நோவா லைல்ஸ்: 100 மீ., ஓட்டத்தில் தங்கம்

'புயல்' வேக வீரர் நோவா லைல்ஸ்: 100 மீ., ஓட்டத்தில் தங்கம்


ADDED : ஆக 06, 2024 12:05 AM

Google News

ADDED : ஆக 06, 2024 12:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாரிஸ்: உலகின் மின்னல் வேக வீரராக மகுடம் சூடினார் அமெரிக்காவின் நோவா லைல்ஸ். பாரிஸ் ஒலிம்பிக் 100 மீ., ஓட்டத்தில் சீறிப்பாய்ந்த இவர், நுாலிழையில் தங்கம் வென்றார்.

பாரிஸ் ஒலிம்பிக்கின் 'ஹைலைட்டாக' ஆண்களுக்கான 100 மீ., ஓட்டம் நடந்தது. பைனலில் பங்கேற்ற 8 பேரும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்காமல் ஓட, விறுவிறுப்பு அதிகரித்தது.

0.005 வினாடி வித்தியாசம்: அனைவரும் 10 வினாடிக்குள் 'பினிஷிங் லைனை' எட்ட, ரசிகர்கள் குழப்பமடைந்தனர். பின் 'போட்டோ பினிஷ்' முறையில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர். லேன் 7ல் 'புயல்' வேகத்தில் ஓடிய அமெரிக்காவின் நோவா லைல்ஸ் (9.784 வினாடி) முதலிடம் பெற்று தங்கம் வென்றார். லேன் 4ல் ஓடிய ஜமைக்காவின் கிஷேன் தாம்ப்சன் (9.789) வெள்ளி வென்றார். இருவருக்கும் இடையிலான வித்தியாசம் 0.005 வினாடி. அதாவது ஒரு வினாடியில் 5 ஆயிரத்தில் ஒரு பங்கு. அமெரிக்காவின் பிரட் கெர்லி (9.82) வெண்கலம் கைப்பற்றினார். கடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் (2021) தங்கம் வென்ற இத்தாலி வீரர் மார்செல் ஜேக்கப்ஸ் (9.85) ஐந்தாவது இடமே பிடிக்க முடிந்தது.

நோவா லைல்ஸ் கூறுகையில்,''நீ ஜெயித்து விட்டாய் என்று கிஷேனிடம் சொன்னேன். அவரது பெயர் முதலிடத்தில் வருவதை காண தயாராக இருந்தேன். ஆனால், தங்கம் வென்றதாக எனது பெயரை அறிவித்தனர். இதை நம்ப முடியவில்லை,'' என்றார்.

தங்கத்தை நழுவவிட்ட தாம்ப்சன் கூறுகையில்,''ஏமாற்றமாக இருக்கிறது. அதே நேரத்தில் மகிழ்ச்சியாகவும் உள்ளது,''என்றார்.

பகிர்ந்து கொள்ளலாமா

டோக்கியோ ஒலிம்பிக் (2021), உயரம் தாண்டுதலில் இத்தாலியின் கியான்மார்கோ டம்பேரி, கத்தாரின் முடாஸ் பர்ஷிம் பெருந்தன்மையுடன் தங்கத்தை பகிர்ந்து கொண்டனர். இருவரும் 2.37 மீ., உயரம் தாண்டினார். இதே 'பார்முலா'வை நோவா லைல்ஸ், கிஷேன் தாம்ப்சன் பின்பற்ற வேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்தினர்.

இது குறித்து தாம்ப்சன் கூறுகையில்,''இந்த 'ஐடியா'வை லைல்ஸ் ஏற்க மாட்டார். ஏனெனில் 100 மீ., ஓட்டம் சவாலானது. கடும் போட்டி நிலவும். தங்கப்பதக்கத்தை பகிர்ந்து கொள்ள இயலாது,'' என்றார்.

வெற்றி எப்படி...

ஓட்டத்தில் கடும் போட்டி நிலவும் போது, 'போட்டோ பினிஷ்' முறையில் வெற்றியாளர் முடிவு செய்யப்படுவார். இதற்கு 'ஸ்லிட் வீடியோ சிஸ்டம்' எனும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. வீரர்கள் ஓடும் டிராக், 'பினிஷ் லைன்' பகுதி ஒரு வினாடிக்கு 2,000 முறை 'ஸ்கேன்' செய்யப்படும். பின் ஒவ்வொரு வீரரும் 'பினிஷ் லைனை' தொட்ட தெளிவான படத்தை, நேரத்துடன் சேர்த்து கொடுக்கும். வீரர்களின் நெஞ்சு, வயிறு பகுதி 'பினிஷ் லைனை' கடந்ததை வைத்து நேரம் கணக்கிடப்படும். கால், தலை, கை கடப்பது முக்கியமல்ல.

பாரிஸ் ஒலிம்பிக் 100 மீ., ஓட்டத்தை பொறுத்தவரை துவக்கத்தில் லைல்ஸ் மந்தமாக ஓடினார். 40 மீ., வரை 8வது இடத்தில் இருந்தார். தாம்ப்சன் 90 மீ., வரை முன்னிலையில் இருந்தார். கடைசி கட்டத்தில் லைல்ஸ் வேகம் எடுத்தார். இருவரும் 'பினிஷிங் லைனை' 9.79 வினாடியில் கடந்தனர். 'போட்டோ பினிஷ்' முறையில் லைல்ஸ் (.784 மைக்ரோ வினாடி) தாம்சனை (.789) முந்தினார். தாம்ப்சனின் பூட்ஸ் தான் 'பினிஷிங் லைனை' முதலில் தொட்டது. ஆனால், லைல்ஸ் தனது நெஞ்சு பகுதியை முன்னோக்கி வைத்து சாமர்த்தியமாக 'பினிஷிங் லைனை' கடந்ததால், தங்கம் கைப்பற்றினார்,

லைல்ஸ் கூறுகையில்,''கடைசி நேரத்தில் நெஞ்சு பகுதியை முன்னே கொண்டு சென்று பலமுறை பயிற்சி எடுத்துள்ளேன். இது பலன் அளித்தது,'' என்றார்.

சோதனை கடந்து சாதனை

அமெரிக்காவின் புளோரிடாவில் பிறந்தவர் நோவா லைல்ஸ், 27. இளம் வயதில் ஆஸ்துமா பாதிப்பால் சிரமப்பட்டார். பெற்றோர் வழியில் தடகளத்தில் இறங்கிய இவர், டோக்கியோ ஒலிம்பிக் 200 மீ., ஓட்டத்தில் வெண்கலம் வென்றார். 2023ல் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் 100 மீ., (9.83 வினாடி), 200 மீ., (19.52) தங்கம் வென்றார்.

நோவா லைல்ஸ் வெளியிட்ட செய்தியில்,'எனக்கு ஆஸ்துமா, அலர்ஜி, மனஅழுத்தம், பதற்றம் என பல பாதிப்புகள் உள்ளன. இவை எனது வாழ்க்கையை தீர்மானிக்கவில்லை. என்னால் சாதிக்க முடியும் போது...உங்களால் ஏன் முடியாது,' என தெரிவித்துள்ளார்.

20 ஆண்டுகளுக்கு பின்...ஒலிம்பிக் 100 மீ., ஓட்டத்தில் 20 ஆண்டுகளுக்கு பின் அமெரிக்காவுக்கு தங்கம் கிடைத்துள்ளது. கடைசியாக 2004ல் ஏதென்சில் நடந்த ஒலிம்பிக் 100 மீ., ஓட்டத்தில் அமெரிக்காவின் ஜஸ்டின் காட்லின் தங்கம் வென்றிருந்தார்.






      Dinamalar
      Follow us