/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
நீச்சல்: ஆஸ்திரேலிய வீராங்கனை ஓய்வு
/
நீச்சல்: ஆஸ்திரேலிய வீராங்கனை ஓய்வு
ADDED : அக் 16, 2025 09:47 PM

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவின் அரியர்னே டிட்மஸ், நீச்சல் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.
ஆஸ்திரேலிய நீச்சல் வீராங்கனை அரியர்னே டிட்மஸ் 25. கடந்த 2016ல் ஜூனியர் பான் பசிபிக் சாம்பியன்ஷிப் தொடரில் பதக்கம் (ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம்) கைப்பற்றிய இவர், காமன்வெல்த் விளையாட்டு (7 தங்கம், ஒரு வெள்ளி), பான் பசிபிக் சாம்பியன்ஷிப் (ஒரு தங்கம், 2 வெள்ளி), உலக சாம்பியன்ஷிப் (6 தங்கம், 2 வெள்ளி, 5 வெண்கலம்) போட்டிகளில் பதக்கங்களை அள்ளினார். இரண்டு முறை (2020, 2024) ஒலிம்பிக்கில் பங்கேற்ற இவர், 4 தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலம் என 8 பதக்கத்தை தட்டிச் சென்றார்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு பின் ஓய்வில் இருந்த டிட்மஸ், லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கான (2028) பயிற்சியை துவக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது, அவரது ரசிர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது.
இதுகுறித்து டிட்மஸ் கூறுகையில், ''இளம் வயதில் இருந்தே நீச்சல் மிகவும் பிடிக்கும். என் வாழ்வின் சில முக்கிய விஷயங்களுக்காக தற்போது நீச்சல் போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறேன்,'' என்றார்.