/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
இந்தியாவுக்கு இரண்டு வெண்கலம்: ஆசிய பாரா டேபிள் டென்னிசில்
/
இந்தியாவுக்கு இரண்டு வெண்கலம்: ஆசிய பாரா டேபிள் டென்னிசில்
இந்தியாவுக்கு இரண்டு வெண்கலம்: ஆசிய பாரா டேபிள் டென்னிசில்
இந்தியாவுக்கு இரண்டு வெண்கலம்: ஆசிய பாரா டேபிள் டென்னிசில்
ADDED : அக் 16, 2025 09:42 PM

பீஜிங்: ஆசிய பாரா டேபிள் டென்னிஸ் ஒற்றையரில் இந்தியாவுக்கு 2 வெண்கலம் கிடைத்தது.
சீனாவின் பீஜிங் நகரில், மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய பாரா டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு ('கிளாஸ் 1') அரையிறுதியில் இந்தியாவின் ஜெகன் மதன், தென் கொரியாவின் சாங் கு ஜியோங் மோதினர். இதில் ஏமாற்றிய ஜெகன் மதன் 0-3 (6-11, 1-11, 8-11) என்ற கணக்கில் தோல்வியடைந்து வெண்கலம் வென்றார்.
மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் சந்தீப் டாங்கி 0-3 (0-11, 1-11, 6-11) என, தென் கொரியாவின் ஹாக்ஜின் கிம்மிடம் தோல்வியடைந்து வெண்கலம் கைப்பற்றினார். இதன்மூலம் ஆசிய பாரா டேபிள் டென்னிஸ் வரலாற்றில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவுக்கு முதன்முறையாக பதக்கம் கிடைத்தது.
பவினா ஏமாற்றம்: பெண்கள் ஒற்றையர் பிரிவு ('கிளாஸ் 4-5') காலிறுதியில் இந்தியாவின் பவினா படேல், 8 முறை பாராலிம்பிக் சாம்பியனான சீனாவின் ஜாங் பியான் மோதினர். இதில் ஏமாற்றிய பவினா 1-3 (11-8, 3-11, 8-11, 9-11) என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.