ADDED : மே 26, 2024 09:12 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கேனட்-என்-ரூசிலன்: பிரான்சில் நடந்த சர்வதேச நீச்சல் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீஹரி நடராஜ் (50 மீ., 'பேக்ஸ்டிரோக்') வெள்ளி வென்றார்.
பிரான்சில், 30வது மாரே நாஸ்ட்ரம் சர்வதேச நீச்சல் போட்டி நடக்கிறது. ஆண்களுக்கான 50 மீ., 'பேக்ஸ்டிரோக்' பிரிவில் இலக்கை 25.50 வினாடியில் கடந்த இந்தியாவின் ஸ்ரீஹரி நடராஜ் வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். இவர், தனது சிறந்த செயல்பாட்டை (25.11 வினாடி) முறியடிக்கும் வாய்ப்பை இழந்தார். ஹங்கேரியின் ஆடம் ஜாஸ்சோ (25.46 வினாடி), பிரிட்டனின் ஸ்காட் கிப்சன் (25.64 வினாடி) முறையே தங்கம், வெண்கலம் வென்றனர்.