/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
டேபிள் டென்னிஸ்: அங்கூர் அபாரம்
/
டேபிள் டென்னிஸ்: அங்கூர் அபாரம்
ADDED : பிப் 16, 2025 08:36 PM

நெவ்செஹிர்: 'யூத் கன்டென்டர்' டேபிள் டென்னிஸ் ஒற்றையரில் இந்திய வீரர் அங்கூர் பட்டாசார்ஜி சாம்பியன் பட்டம் வென்றார்.
துருக்கியில், டபிள்யு.டி.டி., 'யூத் கன்டென்டர்' டேபிள் டென்னிஸ் தொடர் நடந்தது. இதில் 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் அங்கூர் பட்டாசார்ஜி, ஈரானின் பென்யமின் பராஜி மோதினர். மொத்தம் 28 நிமிடம் நீடித்த போட்டியில் அபாரமாக ஆடிய அங்கூர் 3-0 (11-9, 16-14, 14-12) என்ற கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
கடந்த 3 ஆண்டுகளாக 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் அங்கூர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். சமீபத்தில் வதோதராவில் நடந்த 86வது ஜூனியர், யூத் தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் மேற்கு வங்க அணி சார்பில் களமிறங்கிய இவர், ஒற்றையர், இரட்டையர், அணிகள் பிரிவில் தங்கம் கைப்பற்றினார். இதில் ஒற்றையரில் தொடர்ந்து 3வது முறையாக தங்கத்தை தட்டிச் சென்றார்.