தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/டேபிள் டென்னிஸ்: ஜெய்ப்பூர் ஜெயம்

டேபிள் டென்னிஸ்: ஜெய்ப்பூர் ஜெயம்

டேபிள் டென்னிஸ்: ஜெய்ப்பூர் ஜெயம்


ADDED : ஜூன் 07, 2025 10:33 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 07, 2025 10:33 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆமதாபாத்: அல்டிமேட் டேபிள் டென்னிஸ் லீக் போட்டியில் ஜெய்ப்பூர் அணி 11-4 என ஆமதாபாத்தை வென்றது.

ஆமதாபாத்தில் (குஜராத்), அல்டிமேட் டேபிள் டென்னிஸ் 6வது சீசன் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் ஆமதாபாத், ஜெய்ப்பூர் அணிகள் மோதின. ஆண்கள் ஒற்றையர் முதல் போட்டியில் ஜெய்ப்பூரின் கனக் ஜா, ஆமதாபாத்தின் திவ்யான்ஷ் ஸ்ரீவஸ்தவா மோதினர். இதில் கனக் ஜா 3-0 என வென்றார். பெண்கள் ஒற்றையர் முதல் போட்டியில் பிரிட் ஏர்லேண்ட் (ஜெய்ப்பூர்) 3-0 என பிக்கோலினை (ஆமதாபாத்) வீழ்த்தினார்.

கலப்பு இரட்டையர் போட்டியில் ஆமதாபாத்தின் அய்ஹிகா முகர்ஜி, ரிக்கார்டோ வால்டர் ஜோடி 2-1 என ஜெய்ப்பூரின் பிரிட் ஏர்லேண்ட், ஜீத் சந்திரா ஜோடியை வென்றது. ஆண்கள் ஒற்றையர் 2வது போட்டியில் ஜீத் சந்திரா (ஜெய்ப்பூர்) 2-1 என ரிக்கார்டோ வால்டரை (ஆமதாபாத்) தோற்கடித்தார்.

பெண்கள் ஒற்றையர் 2வது போட்டியில் ஜெய்ப்பூரின் ஸ்ரீஜா அகுலா 2-1 என ஆமதாபாத்தின் அய்ஹிகா முகர்ஜியை வீழ்த்தினார். முடிவில் ஜெய்ப்பூர் அணி 2-1 என 3வது வெற்றியை பதிவு செய்தது. இதுவரை விளையாடிய 4 போட்டியில், 3ல் வென்ற ஜெய்ப்பூர் அணி 32 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us