/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
டேபிள் டென்னிஸ்: சரத் கமல் ஏமாற்றம்
/
டேபிள் டென்னிஸ்: சரத் கமல் ஏமாற்றம்
ADDED : மார் 15, 2024 09:44 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கப்பூர்: சிங்கப்பூர் சர்வதேச டேபிள் டென்னிஸ் காலிறுதியில் ஏமாற்றிய இந்திய வீரர் அஜந்தா சரத் கமல் தோல்வியடைந்தார்.
சிங்கப்பூரில் சர்வதேச டேபிள் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் அஜந்தா சரத் கமல், பிரான்சின் பெலிக்ஸ் லெப்ரன் மோதினர். முதல் மூன்று செட்களை 9-11, 2-11, 7-11 என இழந்த சரத் கமல், நான்காவது செட்டை 11-9 எனக் கைப்பற்றினார். மீண்டும் ஏமாற்றிய இவர், ஐந்தாவது செட்டை 8-11 எனக் கோட்டைவிட்டார்.
முடிவில் சரத் கமல் 1-4 (9-11, 2-11, 7-11, 11-9, 8-11) என்ற கணக்கில் தோல்வியடைந்து அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறினார்.

