/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
டேபிள் டென்னிஸ்: பைனலில் சத்யன்
/
டேபிள் டென்னிஸ்: பைனலில் சத்யன்
ADDED : மார் 21, 2024 10:14 PM

பெய்ரூட்: சர்வதேச டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பைனலுக்கு இந்தியாவின் சத்யன், மானவ் விகாஸ் தாக்கர் முன்னேறினர்.
லெபனானில் சர்வதேச டேபிள் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சத்யன் ஞானசேகரன், சீனதைபேயின் சி-யுவன் சுவாங் மோதினர். அபாரமாக ஆடிய சத்யன் 3-1 (11-8, 11-13, 11-8, 11-9) என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறினார்.
மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் மானவ் விகாஸ் தாக்கர், தென் கொரியாவின் ஆன் ஜெய்யூன் மோதினர். இதில் மானவ் விகாஸ் 3-0 (11-9, 11-8, 12-10) என வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தார்.
பைனலில் இந்தியாவின் சத்யன், மானவ் விகாஸ் மோதுகின்றனர்.
ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் மானவ் விகாஸ் தாக்கர், மானுஷ் ஷா ஜோடி 3-1 (11-3, 13-11, 7-11, 11-9) என சகநாட்டை சேர்ந்த ஜீத் சந்திரா, ஸ்னேகித் ஜோடியை வீழ்த்தியது.
கலப்பு இரட்டையர் பைனலில் இந்தியாவின் மானுஷ் ஷா, தியா பராக் ஜோடி 3-1 (11-6, 10-12, 11-6, 11-6) என சகநாட்டை சேர்ந்த மானவ் விகாஸ், அர்ச்சனா கிரிஷ் ஜோடியை வீழ்த்தி தங்கம் வென்றது.

