உள்ளடக்கத்திற்கு செல்ல

இரண்டாவது சுற்றில் ஸ்ரீஜா * டேபிள் டென்னிஸ் சாம்பியன்சில்
இரண்டாவது சுற்றில் ஸ்ரீஜா * டேபிள் டென்னிஸ் சாம்பியன்சில்
ADDED : ஆக 04, 2026 11:08 PM

அ நிறம் | அளவு
யோகோஹமா: டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஸ் தொடரின் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார் ஸ்ரீஜா.
ஜப்பானில் உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஸ் தொடர் நேற்று துவங்கியது. ஆண்கள், பெண்கள் ஒற்றையர் பிரிவில் மட்டும் போட்டிகள் நடக்கின்றன.
பெண்களுக்கான முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா, ஆஸ்திரியாவின் சோபியாவை எதிர்கொண்டார். முதல் செட்டை 9-11 என இழந்தார் ஸ்ரீஜா. பின் சுதாரித்துக் கொண்ட இவர், அடுத்த இரு செட்டுகளை 11-8, 11-6 என வசப்படுத்தினார்.
இழுபறியாக அமைந்த நான்காவது செட்டையும் 12-10 என கைப்பற்றினார். முடிவில் ஸ்ரீஜா, 3-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
ஆண்கள் ஒற்றையரில் இந்தியா சார்பில் மானவ் தாக்கர், மனுஷ் ஷா, பெண்கள் ஒற்றையரில் மணிகா பத்ரா இன்று களமிறங்குகின்றனர்.
