உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : செப் 12, 2026 11:30 PM

அ நிறம் | அளவு
புதுடில்லி: பிலிப்பைன்சில் டபிள்யு.டி.டி., பீடர் டேபிள் டென்னிஸ் தொடர் நடந்தது. பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா, தென் கொரியாவின் லி யு ஜுனை எதிர்கொண்டார். முதல் செட்டை 11-8 என வென்ற ஸ்ரீஜா, அடுத்த செட்டை 11-6 என கைப்பற்றினார். மூன்றாவது செட்டியும் 11-8 என வசப்படுத்தினார். முடிவில் ஸ்ரீஜா, 3-0 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனார்.
கடந்த இரண்டு ஆண்டில் ஸ்ரீஜா வென்ற முதல் சர்வதேச கோப்பை இது ஆனது.
இத்தொடரில் சிறப்பு அனுமதி ('வைல்டு கார்டு') பெற்று விளையாடிய இந்திய வீரர் அன்குர் பட்டாச்சார்ஜீ, ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலுக்கு முன்னேறினார். இதில் 2-3 (11-7, 11-9, 8-11, 7-11, 9-11) என தென் கொரியாவின் காங் சூவிடம் தோற்று, இரண்டாவது இடம் பிடித்தார்.
