/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
இந்தியா 'ஹாட்ரிக்' வெண்கலம் * ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில்...

ADDED : அக் 10, 2024 10:56 PM

அஸ்தானா: கஜகஸ்தானில் ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இந்திய ஆண்கள் அணி தொடர்ந்து மூன்றாவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது. இதில் நேற்று சீன தைபே அணியை எதிர்கொண்டது.
முதலில் நடந்த ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் சரத் கமல், 3-0 என (7-11, 10-12, 9-11) நேர் செட் கணக்கில் யுன் ஜு லின்னிடம் தோல்வியடைந்தார்.
இரண்டாவது ஒற்றையர் போட்டியில் இந்திய வீரர் மானவ் தக்கார், 1-3 என (9-11, 11-8, 3-11, 11-13) செங் ஜு காவோவிடம் வீழ்ந்தார். இந்திய அணி 0-2 என பின் தங்கியது. அடுத்த போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியாவின் ஹர்மீத் தேசாய் களமிறங்கினார்.
இவர் 0-3 என (6-11, 9-11, 7-11) என்ற நேர் செட்டில் செங் ஹுவாங்கிடம் தோற்றார். முடிவில் இந்திய அணி 0-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. ஏற்கனவே 2021, 2023ல் அரையிறுதியில் தோற்று வெண்கலம் பெற்ற இந்தியா, தற்போது தொடர்ந்து மூன்றாவது முறையாக வெண்கலம் வசப்படுத்தியது.