/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
திவ்யான்ஷி, அனன்யா சாம்பியன் * யூத் கன்டெண்டர் டேபிள் டென்னிசில்...

ADDED : ஆக 18, 2025 10:24 PM

அம்மான்: சர்வதேச டேபிள் டென்னிஸ் சார்பில் 'யூத்' கன்டெண்டர் தொடர், ஜோர்டானில் நடந்தது. 15 வயது பெண்களுக்கான பைனலில் இந்தியாவின் அனன்யா, அன்கோலிகா மோதினர். இதில் அனன்யா 3-0 என (11-8, 11-1, 11-3) நேர் செட்டில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனார்.
ஆண்களுக்கான (19 வயது) பைனலில் இந்தியாவின் ஹர்குன்வர் சிங், குஷால் பலப்பரீட்சை நடத்தினர். இதில் ஹர்குன்வர் சிங் 3-1 என்ற செட் கணக்கில் (8-11, 11-8, 11-6, 11-4) வெற்றி பெற்று, சாம்பியன் ஆனார்.
17 வயது பெண்களுக்கான பைனலில் இந்தியாவின் வைஷ்ணவி, திவ்யான்ஷி மோதினர். இதில் திவ்யான்ஷி, 3-0 என (11-5, 11-3, 11-4) வெற்றி பெற்று, சாம்பியன் ஆனார்.
15 வயது கலப்பு இரட்டையரில் இந்தியாவின் திவ்யான்ஷி, அதர்வா ஜோடி 3-0 என ஈரானின் நிஹால், அல் தஹேர் ஜோடியை வென்று சாம்பியன் ஆனது.
19 வயது பிரிவு பைனலில் திவ்யான்ஷி, 2-3 என ஈரானின் செடயேசிடம் தோற்று, இரண்டாவது இடம் பிடித்தார்.
தவிர ஆண்கள் பிரிவில் இந்தியாவின் சித்தாந்த் (15 வயது), அபிநந்த் (17 வயது), பெண்கள் பிரிவில் அனன்யா (17 வயது), ஷிரியா, வைஷ்ணவி (19 வயது) 3வது இடம் பிடித்தனர்.