/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
டேபிள் டென்னிஸ்: மானவ் தக்கார் அபாரம்
/
டேபிள் டென்னிஸ்: மானவ் தக்கார் அபாரம்
ADDED : ஜன 09, 2026 11:06 PM

தோஹா: கத்தார் தலைநகர் தோஹாவில் டபிள்யு.டி.டி., சாம்பியன்ஸ் டேபிள் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இந்தியா சார்பில் மானவ் தக்கார் 25, பங்கேற்கிறார். உலகத் தரவரிசையில் 34 வது இடத்திலுள்ள இவர், ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், உலகின் 17வது இடத்திலுள்ள பிரான்சின் சைமன் காஜியை சந்தித்தார்.
முதல் செட்டை 11-8 என மானவ் தக்கார் கைப்பற்றினார். அடுத்த இரு செட்டுகளை 7-11, 9-11 என இழந்தார். பின் சுதாரித்துக் கொண்ட மானவ் தக்கார், 4, 5வது செட்டுகளை 11-7, 11-8 என வசப்படுத்தினார்.
35 நிமிடம் நீடித்த போட்டி முடிவில் மானவ் தக்கார், 3-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். அடுத்து காலிறுதிக்கு முந்தைய சுற்றில் உலகின் 'நம்பர்-4' வீரர், சுவீடனின் டிரல்ஸ் மோர்கார்டுவை சந்திக்க உள்ளார்.

