/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
டேபிள் டென்னிஸ் * பிரியானுஜ், ஸ்ரீஜனி சாம்பியன்
/
டேபிள் டென்னிஸ் * பிரியானுஜ், ஸ்ரீஜனி சாம்பியன்
ADDED : ஜன 05, 2026 11:25 PM

வதோதரா: குஜராத்தின் வதோதராவில், சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு சார்பில் 'யூத் கன்டெண்டர் சீரிஸ்' நடந்தது. இதில், 17 வயது பிரிவில் ரூபம், சின்ட்ரல்லா, 15 வயது பிரிவில் ஆதித்யா, 13வயது பிரிவில் பிரனவ், திவிஜா என இந்திய நட்சத்திரங்கள் கோப்பை வென்றனர்.
நேற்று 19 வயது பிரிவு பெண்கள் ஒற்றையர் பைனல் நடந்தது. இந்தியாவின் திவ்யான்ஷி, ஜப்பானின் மிகு மட்சுஷிமா மோதினர். முதல் செட்டை 6-11 என இழந்த திவ்யான்ஷி, அடுத்த இரு செட்டுகளை 11-9, 11-9 என போராடி வென்றார். பின் கடைசி இரு செட்டுகளை 8-11, 3-11 என நழுவவிட்டார். முடிவில் திவ்யான்ஷி, 2-3 என்ற செட் கணக்கில் போராடி தோல்வியடைந்தார்.
15 வயது பிரிவு பெண்கள் பைனலில் இந்தியாவின் ஸ்ரீஜனி, தனிஷ்கா மோதினர். இதில் ஸ்ரீஜனி, 3-2 (8-11, 11-8, 7-11, 11-7, 11-5) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, கோப்பை வென்றார்.
ஆண்கள் ஒற்றையர் (19 வயது) பிரிவு பைனலில் இந்திய வீரர்கள் பிரியானுஜ், சர்தாக் ஆர்யா மோதினர். இதில் பிரியானுஜ் 3-0 என்ற (12-10, 11-8, 14-12) நேர் செட்டில் வென்று, சாம்பியன் ஆனார்.

