/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
கடைசி நிமிடத்தில் கோல் * ஹாக்கி இந்தியா அணி 'திரில்' வெற்றி
/
கடைசி நிமிடத்தில் கோல் * ஹாக்கி இந்தியா அணி 'திரில்' வெற்றி
கடைசி நிமிடத்தில் கோல் * ஹாக்கி இந்தியா அணி 'திரில்' வெற்றி
கடைசி நிமிடத்தில் கோல் * ஹாக்கி இந்தியா அணி 'திரில்' வெற்றி
ADDED : ஜன 05, 2026 11:18 PM

சென்னை: ஹாக்கி இந்தியா லீக் போட்டியில், கடைசி நிமிடத்தில் கோல் அடித்த எச்.ஐ.எல்., அணி 3-2 என்ற கணக்கில் 'திரில்' வெற்றி பெற்றது.
ஆண்களுக்கான ஹாக்கி இந்தியா லீக் 7வது சீசன் சென்னையில் நடக்கிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. நேற்று சென்னையில் நடந்த லீக் போட்டியில் டில்லி, எச்.ஐ.எல்., அணிகள் மோதின.
முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இரண்டாவது பாதி துவங்கியதும் பைப்பர்ஸ் வீரர் வில்லாட், ஒரு 'பீல்டு' கோல் அடித்தார். இதன் பின் சுதாரித்துக் கொண்ட எச்.ஐ.எல்., அணிக்கு கேன் ரசல், 35, 37 வது நிமிடங்களில் கோல் அடிக்க, 2-1 என முந்தியது. பின் ஸ்கோர் 2-2 என ஆனது.
போட்டி முடிவதற்கு 44 வினாடி இருந்த போது, கிடைத்த 'பெனால்டி கார்னர்' வாய்ப்பில் கேன் ரசல் (60) 'ஹாட்ரிக்' கோல் அடித்தார். முடிவில் எச்.ஐ.எல்., அணி 3-2 என்ற கோல் கணக்கில் 'திரில்' வெற்றி பெற்றது.
சூர்மா வெற்றி
ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில், பெண்களுக்கான ஹாக்கி இந்தியா லீக் 2வது சீசன் நடக்கிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் ஹரியானாவின் சூர்மா, ராஞ்சி ராய்ல்ஸ் அணிகள் மோதின. இதில் சூர்மா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. சூர்மா அணிக்கு பென்னி (1 வது நிமிடம்), ஒலிவியா (39) தலா ஒரு கோல் அடித்தனர். ராஞ்சி சார்பில் அகோஸ்டினா (35) மட்டும் ஆறுதல் தந்தார்.
பெண்கள் பிரிவு பட்டியலில் பைப்பர்ஸ் (10 புள்ளி), பெங்கால் (8), ராஞ்சி (6), சூர்மா (3) அணிகள், நான்கு இடத்தில் உள்ளன.

