/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
இந்தியா ஆறுதல் வெற்றி * உலக கோப்பை டேபிள் டென்னிசில்
/
இந்தியா ஆறுதல் வெற்றி * உலக கோப்பை டேபிள் டென்னிசில்
இந்தியா ஆறுதல் வெற்றி * உலக கோப்பை டேபிள் டென்னிசில்
இந்தியா ஆறுதல் வெற்றி * உலக கோப்பை டேபிள் டென்னிசில்
ADDED : டிச 03, 2024 11:20 PM

செங்டு: உலக கோப்பை டேபிள் டென்னிசில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.
சீனாவில் கலப்பு அணிகளுக்கான உலக கோப்பை டேபிள் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஸ்டேஜ் 1ல் இந்தியா 'ஏ' பிரிவில் இடம் பெற்றது. முதல் இரு போட்டியில் சீனா, அமெரிக்காவிடம் இந்திய அணி தோல்வியடைந்தது. நேற்று தனது மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது.
முதலில் நடந்த கலப்பு இரட்டையர் போட்டியில் இந்தியாவின் பிரிதா, ஜீத் சந்திரா ஜோடி 1-2 என ஆஸ்திரேலியாவின் பின் லு, ஜியான் பங் ஜோடியிடம் தோற்றது. பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் யாஷஸ்வினி, 1-2 என வீழ்ந்தார்.
அடுத்து நடந்த ஆண்கள் ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் ஸ்னேஹித் 2-1 என நிகோலசை வீழ்த்தினார். ஆண்கள் இரட்டையரில் ஸ்னேஹித், ஜீத் சந்திரா ஜோடி 2-1 என நிகோலஸ், பின் லுவை வென்றது.
ஸ்கோர் 6-6 என சமன் ஆனது. கடைசியாக நடந்த பெண்கள் இரட்டையரில் பிரிதா, யாஷஸ்வினி ஜோடி 2-0 என ஜியான் பங், கான்ஸ்டன்டினா ஜோடியை வென்றது.
முடிவில் இந்திய 8-6 என ஆறுதல் வெற்றி பெற்றது.
புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்து அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது.