/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
தமிழ் தலைவாஸ்-ஜெய்ப்பூர் 'டை': புரோ கபடியில் 'விறுவிறு'
/
தமிழ் தலைவாஸ்-ஜெய்ப்பூர் 'டை': புரோ கபடியில் 'விறுவிறு'
தமிழ் தலைவாஸ்-ஜெய்ப்பூர் 'டை': புரோ கபடியில் 'விறுவிறு'
தமிழ் தலைவாஸ்-ஜெய்ப்பூர் 'டை': புரோ கபடியில் 'விறுவிறு'
ADDED : அக் 27, 2024 11:06 PM

ஐதராபாத்: ஜெய்ப்பூர், தமிழ் தலைவாஸ் அணிகள் மோதிய புரோ கபடி லீக் போட்டி 30-30 என 'டை' ஆனது.
இந்தியாவில், புரோ கபடி லீக் 11வது சீசன் நடக்கிறது. நேற்று, ஐதராபாத்தில் நடந்த லீக் போட்டியில் ஜெய்ப்பூர், தமிழ் தலைவாஸ் அணிகள் மோதின. தமிழ் தலைவாஸ் வீரர்களை 'ஆல்-அவுட்' செய்த ஜெய்ப்பூர் அணி, முதல் பாதி முடிவில் 21-16 என முன்னிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியின் கடைசி நேரத்தில் தமிழ் தலைவாஸ் அணி 28-30 என பின்தங்கி இருந்தது. இந்நிலையில் 'ரெய்டு' சென்ற சச்சின், தமிழ் தலைவாஸ் அணிக்கு ஒரு புள்ளி பெற்றுத்தந்தார். தொடர்ந்த அசத்திய சச்சின், கடைசியாக 'ரெய்டு' வந்த ஜெய்ப்பூரின் ரேசா மிர்பகேரியை 'அவுட்' செய்தார். ஆட்டநேர முடிவில் போட்டி 30-30 என்ற கணக்கில் 'டை' ஆனது.
தமிழ் தலைவாஸ் அணிக்கு சச்சின் (11 புள்ளி) கைகொடுத்தார். ஜெய்ப்பூர் சார்பில் கேப்டன் அர்ஜுன் தேஷ்வால் 7 புள்ளி பெற்றார். தமிழ் தலைவாஸ் அணி, 4 போட்டியில், 2 வெற்றி, ஒரு 'டை', ஒரு தோல்வி என 14 புள்ளிகளுடன் 2வது இடத்துக்கு முன்னேறியது. முதலிடத்தில் புனே (16 புள்ளி) உள்ளது. ஜெய்ப்பூர் அணி (13) 3வது இடத்துக்கு தள்ளப்பட்டது.