/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
பெங்களூரு அணி வெற்றி: அல்டிமேட் டேபிள் டென்னிசில்
/
பெங்களூரு அணி வெற்றி: அல்டிமேட் டேபிள் டென்னிசில்
ADDED : ஆக 26, 2024 10:51 PM

சென்னை: அல்டிமேட் டேபிள் டென்னிஸ் லீக் போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
சென்னையில், அல்டிமேட் டேபிள் டென்னிஸ் 5வது சீசன் நடக்கிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் புனே, பெங்களூரு அணிகள் மோதின. ஆண்கள் ஒற்றையர் முதல் போட்டியில் புனேயின் அங்கூர் பட்டாசார்ஜி, பெங்களூருவின் ஜீத் சந்திரா மோதினர். இதில் அங்கூர் 2-1 (11-6, 5-11, 11-7) என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் போட்டியில் பெங்களூருவின் மணிகா பத்ரா, புனேயின் அய்ஹிகா முகர்ஜி மோதினர். இதில் மணிகா 2-1 (8-11, 11-5, 11-6) என வெற்றி பெற்றார். கலப்பு இரட்டையர் போட்டியில் பெங்களூருவின் மணிகா, அல்வாரோ ஜோடி 2-1 (11-6, 8-11, 11-10) என புனேயின் நடாலியா, அனிர்பான் ஜோடியை வீழ்த்தியது.
ஆண்கள் ஒற்றையர் 2வது போட்டியில் பெங்களூருவின் அல்வாரோ 2-1 (11-5, 10-11, 11-8) என புனேயின் ஜோவா மான்டீரோவை தோற்கடித்தார். பெண்கள் ஒற்றையர் 2வது போட்டியில் கோவாவின் யாஷினி 0-3 (9-11, 9-11, 5-11) என பெங்களூருவின் லில்லி ஜாங்கிடம் தோல்வியடைந்தார். முடிவில் பெங்களூரு அணி 10-5 என்ற கணக்கில் தொடர்ச்சியாக 2வது வெற்றியை பதிவு செய்தது.