/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
டேபிள் டென்னிஸ்: ஆமதாபாத் அபாரம்
/
டேபிள் டென்னிஸ்: ஆமதாபாத் அபாரம்
ADDED : ஜூன் 10, 2025 09:56 PM

ஆமதாபாத்: அல்டிமேட் டேபிள் டென்னிஸ் லீக் போட்டியில் ஆமதாபாத் அணி 8-7 என கோல்கட்டாவை வென்றது.
ஆமதாபாத்தில், அல்டிமேட் டேபிள் டென்னிஸ் 6வது சீசன் நடக்கிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் கோல்கட்டா, ஆமதாபாத் அணிகள் மோதின. ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் போட்டியில் கோல்கட்டா அணியின் அன்குர் பட்டாச்சார்ஜீ, ஆமதாபாத் அணியின் ரிக்கார்டோ வால்தர் மோதினர். இதில் ரிக்கார்டோ 2-1 (11-10, 11-5, 10-11) என வெற்றி பெற்றார்.
பெண்கள் ஒற்றையர் முதல் போட்டியில் ஆமதாபாத் அணியின் ஆயிஹா முகர்ஜி, கோல்கட்டாவின் அட்ரியானா தியாசை எதிர்கொண்டார். முதல் செட்டை 11-10 என வென்ற ஆயிஹா, அடுத்த செட்டை 8-11 என இழந்தார். மூன்றாவது செட்டை 1-11 என கோட்டை விட்டார். முடிவில் ஆயிஹா 1-2 என தோல்வியடைந்தார்.
கலப்பு இரட்டையர் போட்டியில் ஆயிஹா, ரிக்கார்டோ ஜோடி (ஆமதாபாத்), 1-2 என கோல்கட்டாவின் அட்ரியானா, அன்குர் ஜோடியிடம் தோற்றது.
ஆண்கள் ஒற்றையர் 2வது போட்டியில் ஸ்நேகித் (ஆமதாபாத்), 3-0 என குவாட்ரி அருணாவை (கோல்கட்டா) வென்றார். பெண்கள் ஒற்றையர் 2வது போட்டியில் செலினா (கோல்கட்டா), 2-1 என யாஷினியை (ஆமதாபாத்) வென்றார். முடிவில் ஆமதாபாத் அணி 8-7 என 'திரில்' வெற்றி பெற்றது.