உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : நவ 09, 2026 04:09 AM

அ நிறம் | அளவு
சென்னை: சென்னை ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் வைஷ்ணவி, ருதுஜா ஜோடி தோல்வியடைந்தது.
சென்னையில், பெண்களுக்கான ‘டபிள்யு.டி.ஏ., 250’ அந்தஸ்து பெற்ற சென்னை ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. இரட்டையர் பிரிவு பைனலில், இந்தியாவின் வைஷ்ணவி அத்கர், ருதுஜா போசலே ஜோடி, சுவிட்சர்லாந்தின் நைமா கரமோகோ, சிமோனா வால்டெர்ட் ஜோடியை எதிர்கொண்டது.
முதல் செட்டை 2–6 என இழந்த இந்திய ஜோடி, இரண்டாவது செட்டை 0–6 என பறிகொடுத்தது. ஒரு மணி நேரம், 10 நிமிடம் நடந்த போட்டியில் ஏமாற்றிய வைஷ்ணவி, ருதுஜா ஜோடி 2–6, 0–6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து 2வது இடத்தை கைப்பற்றியது. சுவிட்சர்லாந்து ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
