உள்ளடக்கத்திற்கு செல்ல

வன்ஷிகா-ஷிவா 'வெள்ளி': ஜூனியர் உலக துப்பாக்கி சுடுதலில்
வன்ஷிகா-ஷிவா 'வெள்ளி': ஜூனியர் உலக துப்பாக்கி சுடுதலில்
ADDED : ஜூன் 24, 2026 10:48 PM

அ நிறம் | அளவு
சுல்: ஜூனியர் உலக துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் வன்ஷிகா, ஷிவா நார்வல் ஜோடி வெள்ளி வென்றது.
ஜெர்மனியில், ஜூனியர் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் நடக்கிறது. கலப்பு அணிகளுக்கான 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவு பைனலில் இந்தியாவின் வன்ஷிகா சவுத்ரி, ஷிவா நார்வல் ஜோடி, 469.7 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றது. முதலிடத்தை போலந்து ஜோடி (471.9) தட்டிச் சென்றது.
ஜூனியர் ஆண்கள் 25 மீ., 'ஸ்டேன்டர்டு பிஸ்டல்' பிரிவில் அபினவ் தேஷ்வால் (574.12), ஜடின் (565.15), அபினவ் சவுத்ரி (558.13) அடங்கிய இந்திய அணி 1697.40 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றியது. உக்ரைன் அணி (1701.40) தங்கம் கைப்பற்றியது.
இதுவரை 6 தங்கம், 6 வெள்ளி, 8 வெண்கலம் என, 20 பதக்கம் கைப்பற்றிய இந்தியா, முதலிடத்தில் உள்ளது.
