தங்கம் வென்றார் பிரிதம் * உலக ஜூனியர் துப்பாக்கிசுடுதலில்
தங்கம் வென்றார் பிரிதம் * உலக ஜூனியர் துப்பாக்கிசுடுதலில்
ADDED : ஜூன் 22, 2026 11:48 PM

சஹ்ல்: ஜெர்மனியில் ஜூனியர் உலக துப்பாக்கிசுடுதல் சாம்பியன்ஷிப் நடக்கிறது. ஆண்களுக்கான 10 மீ., ஏர் ரைபிள் பிரிவில் போட்டி நடந்தன. இதன் தகுதிச்சுற்றில் இந்தியாவின் 16 வயது வீரர் பிரிதிம் கேந்த்ரே, பியுஷ் சர்மா பங்கேற்றனர். சமீபத்தில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய பிரிதமிற்கு, இரண்டாவது சர்வதேச தொடர் இது.
தகுதிச்சுற்றில் இந்தியாவின் பியுஷ் சர்மா (629.0 புள்ளி), பிரிதம் (628.2) 3, 5வது இடம் பெற்று, பைனலுக்குள் நுழைந்தனர். இதில் சிறப்பாக செயல்பட்ட பிரிதம், மொத்தம் 251.3 புள்ளியுடன் முதலிடம் பெற, தங்கப்பதக்கம் தட்டிச் சென்றார். ரஷ்யாவின் டிமோபெய் (250.9), நார்வேயின் ஆஸ்ட்லி (228.4) அடுத்த இரு இடம் பெற்றனர். பியுஷ் சர்மா (207.4) நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
பெண்கள் அணிகளுக்கான 25 மீ., பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் அஞ்சலி, பரிஷா, நிதிலா இடம் பெற்ற அணி 1713 புள்ளிகள் எடுத்து, வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது.
இந்தியா இதுவரை 5 தங்கம், 1 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 12 பதக்கம் பெற்று, பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
