ADDED : ஜூன் 22, 2026 11:46 PM

ஜுன்யி: ஆசிய ஜிம்னாஸ்டிக்சில் இந்தியாவின் ஹர்சித் தங்கம், அக்சய் தங்கம், வெள்ளிப்பதக்கம் வென்றனர்.
சீனாவில் ஆசிய ஜிம்னாஸ்டிக்சில் 13வது சீனியர், 19வது ஜூனியர் 'ஆர்ட்டிஸ்ட்' தொடர் நடக்கிறது. ஆண்களுக்கான வால்ட் பிரிவில் இந்தியா சார்பில் ஹர்சித் தாமோதரன், அக்சய் பஜாஜ் பங்கேற்றனர். இதன் வால்ட் பிரிவில் ஹர்சித் (13.866, 13.433) சராசரி 13.649 புள்ளிகள் எடுத்து முதலிடம் பிடித்து, தங்கம் கைப்பற்றி வரலாறு படைத்தார்.
இந்தியாவின் அக்சய் (13.500, 13.366) சராசரி 13.433 புள்ளிகள் எடுத்து, வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார். உஸ்பெகிஸ்தான் வீரர் பக்தியரோவ் பெக்ஜாத் (13.283) வெண்கலம் வசப்படுத்தினார்.
தவிர, அணிகளுக்கான போட்டியில் ஹர்ஷித், அக்சய், நிஷாத், நபிக் அலி, முகமது அன்சாரி இடம் பெற்ற இந்தியா, வெண்கலப்பதக்கம் வென்றது. சீனா, ஜப்பான் அணிகளுக்கு தங்கம், வெள்ளி கிடைத்தன.
