தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/வரலாறு படைத்த விஷ்வஜித்: உலக மல்யுத்தம் பைனலுக்கு தகுதி

வரலாறு படைத்த விஷ்வஜித்: உலக மல்யுத்தம் பைனலுக்கு தகுதி

வரலாறு படைத்த விஷ்வஜித்: உலக மல்யுத்தம் பைனலுக்கு தகுதி


UPDATED : அக் 15, 2026 12:00 AM

ADDED : அக் 14, 2026 06:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 15, 2026 12:00 AM ADDED : அக் 14, 2026 06:18 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

லாஸ் வேகாஸ்: உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் (23 வயது) கிரிகோ ரோமன் பிரிவில் பைனலுக்கு முன்னேறிய முதல் இந்தியர் என விஷ்வஜித் வரலாறு படைத்தார்.

அமெரிக்காவில் 23 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் நடக்கிறது. முதலில் ஆண்களுக்கான கிரிகோ ரோமன் போட்டிகள் நடக்கின்றன. 55 கிலோ பிரிவில் இந்தியா சார்பில் விஷ்வஜித் மோர் பங்கேற்றார். முதல் சுற்றில் 10–8 என மெக்சிகோவின் மரினை வென்றார்.

அடுத்து காலிறுதியில் விஷ்வஜித், ஆர்மின் சாடியை 8–1 என்ற கணக்கில் வீழ்த்தினார். அடுத்து நடந்த அரையிறுதியில் விஷ்வஜித், ரஷ்யாவின் மாலிக் ஜிஜியேவ் மோதினர். இதில் அசத்திய விஷ்வஜித், 7–4 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் (23 வயது) தொடரில், கிரிகோ ரோமன் பிரிவில் பைனலுக்கு முன்னேறிய முதல் இந்தியர் என வரலாறு படைத்தார்.

ஜூனியர் பிரிவில் இரு முறை வெண்கலம் வென்றுள்ள விஷ்வஜித், பைனலில் ஜார்ஜியாவின் கோபா கருமிட்சை சந்திக்க உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us