/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
வாஷிங்டன் ஸ்குவாஷ்: வேலவன் அபாரம்
/
வாஷிங்டன் ஸ்குவாஷ்: வேலவன் அபாரம்
ADDED : ஜன 29, 2026 09:52 PM

வாஷிங்டன்: சர்வதேச ஸ்குவாஷ் தொடரின் முதல் சுற்றில் இந்தியாவின் வேலவன் செந்தில்குமார், வீர் சோட்ரானி வெற்றி பெற்றனர்.
அமெரிக்காவின் வாஷிங்டனில், 'பயர் ஓபன்' சர்வதேச ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. ஆண்களுக்கான முதல் சுற்றில் இந்தியாவின் வேலவன் செந்தில்குமார், இங்கிலாந்தின் டாம் வால்ஷ் மோதினர். 'நடப்பு தேசிய சாம்பியன்' வேலவன் 3-1 (12-14, 11-8, 11-8, 11-6) என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
மற்றொரு முதல் சுற்றில் இந்தியாவின் வீர் சோட்ரானி, ஹங்கேரியின் பாலாஸ் பர்காஸ் மோதினர். இதில் வீர் சோட்ரானி 3-2 (6-11, 9-11, 11-5, 11-9, 11-3) என வெற்றி பெற்றார்.
பெண்கள் பிரிவு முதல் சுற்றில், 'நடப்பு தேசிய சாம்பியன்' இந்தியாவின் அனாஹத் சிங்கிற்கு 'பை' வழங்கப்பட்டதால், நேரடியாக 2வது சுற்றில் விளையாடுவார்.

