/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
இந்திய வீராங்கனைகளுக்கு வரவேற்பு: ஜூனியர் ஆசிய ஹாக்கியில் சாம்பியன்
/
இந்திய வீராங்கனைகளுக்கு வரவேற்பு: ஜூனியர் ஆசிய ஹாக்கியில் சாம்பியன்
இந்திய வீராங்கனைகளுக்கு வரவேற்பு: ஜூனியர் ஆசிய ஹாக்கியில் சாம்பியன்
இந்திய வீராங்கனைகளுக்கு வரவேற்பு: ஜூனியர் ஆசிய ஹாக்கியில் சாம்பியன்
ADDED : டிச 16, 2024 09:27 PM

பெங்களூரு: ஜூனியர் ஆசிய கோப்பை வென்று தாயகம் திரும்பிய இந்திய ஹாக்கி வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஓமன் தலைநகர் மஸ்கட்டில், பெண்களுக்கான ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி 9வது சீசன் நடந்தது. இதன் பைனலில் இந்திய அணி 3-2 என 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் சீனாவை வீழ்த்தி மீண்டும் (2023, 2024) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ஹாக்கி இந்தியா சார்பில் இந்திய வீராங்கனைகளுக்கு தலா ரூ. 2 லட்சம், பயிற்சியாளர், உதவியாளர் குழுவினருக்கு தலா ரூ. ஒரு லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டது.
பெங்களூருவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்திற்கு வந்த இந்திய அணியினருக்கு மாலை அணிவித்து, மேள தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
இத்தொடரில் அதிகபட்சமாக 12 கோல் அடித்த இந்திய வீராங்கனை தீபிகா கூறுகையில், ''அதிக கோல் அடித்ததில் மகிழ்ச்சி. இது, சகவீராங்கனைகளின் உதவியில்லாமல் சாத்தியமில்லை. இளம் வீராங்கனைகளின் செயல்பாடு சிறப்பாக இருந்தது,'' என்றார்.
கேப்டன் ஜோதி சிங் கூறுகையில், ''இந்த வெற்றி ஒட்டுமொத்த அணியினரின் கடின உழைப்புக்கு கிடைத்தது. சகவீராங்கனைகளால் பெருமை அடைந்துள்ளேன். சீனாவுக்கு எதிரான பைனல் சவாலாக இருந்தது. தீபிகாவின் செயல்பாடு பாராட்டுக்குரியது. இவருக்கு, கனிகா, சுனேலிதா, மும்தாஜ் கான் ஒத்துழைப்பு கொடுத்தனர்,'' என்றார்.
கோப்பை மழை
ஹாக்கி இந்தியா (எச்.ஐ.,) அமைப்பு 1925, நவ. 7ல், குவாலியரில் துவங்கப்பட்டது. தற்போது நுாற்றாண்டு கொண்டாட்டத்தை துவக்கியுள்ளது. இந்நிலையில் 2024, இந்தியாவுக்கு சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது.
* ஒலிம்பிக்கில் 52 ஆண்டுக்குப் பின் இந்தியா, ஆஸ்திரேலியாவை (இடம்: பாரிஸ்) வீழ்த்தியது.
* 2024 ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றது.
* இந்திய ஆண்கள், பெண்கள் அணிகள் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி வென்றன.
* தற்போது இந்திய ஜூனியர் ஆண், பெண்கள் அணிகள், ஆசிய கோப்பை வசப்படுத்தின.