/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
உலக வில்வித்தை: இந்தியா 'வெண்கலம்'
/
உலக வில்வித்தை: இந்தியா 'வெண்கலம்'
ADDED : ஜூன் 23, 2024 11:19 PM

அன்டல்யா: உலக கோப்பை வில்வித்தை 'ரிகர்வ்' பிரிவில் இந்தியாவின் திராஜ், பஜன் கவுர் ஜோடி வெண்கலம் வென்றது.
துருக்கியில், உலக கோப்பை வில்வித்தை ('ஸ்டேஜ்-3') நடந்தது. இதன் கலப்பு அணிகளுக்கான 'ரிகர்வ்' பிரிவில் நடந்த வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியா, மெக்சிகோ அணிகள் மோதின. இந்தியாவின் திராஜ், பஜன் கவுர் ஜோடி 5-3 (35-38, 40-39, 38-37, 38-38) என்ற கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றது.
ஆண்கள் தனிநபர் 'ரிகர்வ்' பிரிவு வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் திராஜ் 7-3 என இத்தாலியின் மவுரோ நெஸ்போலியை வீழ்த்தினார்.
பெண்கள் தனிநபர் 'ரிகர்வ்' பிரிவு வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் அன்கிதா பகத் 3-7 என மெக்சிகோவின் அலெஜான்டிரா வாலன்சியாவிடம் தோல்வியடைந்தார்.
இத்தொடரில் இந்தியாவுக்கு ஒரு தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கலம் என நான்கு பதக்கம் கிடைத்தது. ஏற்கனவே பெண்கள் 'காம்பவுண்டு' பிரிவில் ஜோதி, ஆதித்தி, பர்னீத் கவுர் அடங்கிய இந்திய அணி தங்கம் வென்றது. ஆண்கள் தனிநபர் 'காம்பவுண்டு' பிரிவில் இந்தியாவின் பிரியான்ஷ் வெள்ளி வென்றிருந்தார்.