/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
உலக தடகளம்: இந்திய அணி அறிவிப்பு
/
உலக தடகளம்: இந்திய அணி அறிவிப்பு
ADDED : ஆக 31, 2025 10:30 PM

புதுடில்லி: உலக தடகள போட்டிக்கான இந்திய அணியில் நீரஜ் சோப்ரா, முரளி ஸ்ரீசங்கர் உள்ளிட்ட 19 பேர் இடம் பெற்றுள்ளனர்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், வரும் செப். 13-21ல் உலக தடகள சாம்பியன்ஷிப் 20வது சீசன் நடக்கவுள்ளது. இதற்கான அணியை, இந்திய தடகள கூட்டமைப்பு அறிவித்தது.
மொத்தம் 19 பேர் கொண்ட இந்திய அணியில், ஈட்டி எறிதல் சார்பில் 'நடப்பு சாம்பியன்' நீரஜ் சோப்ரா, சச்சின் யாதவ், ரோகித் யாதவ், யஷ்விர் சிங் என 4 பேர் இடம் பெற்றுள்ளனர். உலக தடகள ஈட்டி எறிதலில், இந்தியா சார்பில் முதன்முறையாக 4 பேர் பங்கேற்கவுள்ளனர். கடந்த முறை (2023) 4 பேர் தேர்வாகினர். ஆனால், காயத்தால் ரோகித் யாதவ் விலகினார்.
இந்த அணியில் பருல் சவுத்ரி, அங்கிதா தியானி (3000 மீ., 'ஸ்டீபிள்சேஸ்'), அன்னு ராணி (ஈட்டி எறிதல்), பிரியங்கா கோஸ்வாமி (35 கி.மீ., நடை போட்டி), பூஜா (800, 1500 மீ., ஓட்டம்) என 5 பேர் உள்ளனர்.
இந்திய அணியில் முரளி ஸ்ரீசங்கர் (நீளம் தாண்டுதல்), குல்வீர் சிங் (5000, 10000 மீ., ஓட்டம்), பிரவீன் சித்ரவேல், அப்துல்லா அபூபக்கர் ('டிரிபிள் ஜம்ப்'), சர்வேஷ் (உயரம் தாண்டுதல்), அனிமேஷ் (200 மீ., ஓட்டம்), தேஜாஸ் (110 மீ., தடை தாண்டும் ஓட்டம்), செர்வின் செபாஸ்டியன் (20 கி.மீ., நடை போட்டி), ராம் பாபூ, சந்தீப் குமார் (35 கி.மீ., நடை போட்டி) ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
ஏற்கனவே உலக தடகள போட்டிக்கு தகுதி பெற்றிருந்த அவினாஷ் (3000 மீ., 'ஸ்டீபிள்சேஸ்'), நந்தினி ('ஹெப்டத்லான்'), அக் ஷ்தீப் சிங் (20 கி.மீ., நடை போட்டி), காயத்தால் விலக நேரிட்டது.

